Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ஷிபா மருத்துவமனையில் இன்று முதல் இலவச மருத்துவமுகாம்!

கஜா புயல் காரணமாக பெரும் பாதிப்புக்கு ஆளான அதிரை மக்கள் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் புயல், மழையால் அதிரையில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் அதிரை ஷிபா மருத்துவமனை மற்றும் அதிரை மேம்பாட்டு சங்கமம் இணைந்து சிறப்பு மருத்துவர்களை கொண்டு இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.