Adirai pirai
உள்ளூர் செய்திகள்

மத்தியக்குழுவை ஏமாற்ற அதிரையை செட்அப் செய்து நாடகமாடும் பேரூராட்சி

கஜா புயல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழகம் வந்துள்ள மத்தியக்குழு இன்று தஞ்சையில் ஆய்வு செய்கிறது. காலை ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில் மத்தியக்குழு ஆய்வு செய்துவிட்டு தற்போது பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் ஆய்வு செய்ய உள்ளது. அதை தொடர்ந்து மத்தியக்குழு அதிராம்பட்டினம் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிரை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதை போன்றும், பேரூராட்சி சிறப்பாக பணியாற்றி வருவதை போன்றும் மத்தியக்குழுவுக்கு காட்டுவதற்காக இன்று பேரூராட்சி மெயின் ரோட்டை சுத்தம் செய்துள்ளது.

இவ்வளவு நாட்களாக ஒன்றும் கிழிக்காத பேரூராட்சிக்கு இன்று மட்டும் ஊர் மீது என்ன அக்கரை என்ற பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்? இது மத்தியக்குழுவை ஏமாற்றுவதற்காக பேரூராட்சி போட்ட நாடகமாகவே மக்களால் கருதப்படுகிறது.