Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை தென்னை விவசாயிகளுக்கு ஒரு அவசர அறிவிப்பு!

கஜா புயல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழகம் வந்துள்ள மத்தியக்குழு இன்று தஞ்சையில் ஆய்வு செய்கிறது. காலை ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில் மத்தியக்குழு ஆய்வு செய்துவிட்டு தற்போது பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் ஆய்வு செய்ய உள்ளது. அதை தொடர்ந்து மத்தியக்குழு அதிராம்பட்டினம் வர உள்ளது. இந்த நிலையில் உள்ளூர் புதுக்கோட்டையில் உள்ள துவர்பாக்கு தென்னை தோப்பிற்கு மத்தியக்குழுவினர் வர உள்ளனர். இதையொட்டி ஏராளமான தென்னை விவசாயிகள் அங்கு திரண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறியாத விவசாயிகள் அங்கு சென்று பாதிப்புகளை தெரிவிக்கலாம்.