Adirai pirai
Gaza relief உள்ளூர் செய்திகள்

அதிரையை எட்டிப்பார்க்காத மத்தியக்குழு… உள்ளூர் புதுக்கோட்டையுடன் திரும்பிய அதிகாரிகள்


கஜா புயல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழகம் வந்துள்ள மத்தியக்குழு இன்று தஞ்சையில் ஆய்வு செய்கிறது. காலை ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில் மத்தியக்குழு ஆய்வு செய்துவிட்டு தற்போது பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் ஆய்வு செய்ய உள்ளது. அதை தொடர்ந்து மத்தியக்குழு அதிரை அருகே உள்ளூர் புதுக்கோட்டையில் உள்ள துவர்பாக்கு தென்னை தோப்பிற்கு வந்த மத்தியக்குழுவினர் தென்னை விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். ஆனால், அதிராம்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் சென்று மக்களின் கோரிக்கைகளை, பாதிப்புகளை அவர்கள் கேட்காமல் மல்லிப்பட்டினம் புறப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.