Adirai pirai
உள்ளூர் செய்திகள்

ஹீரோ ஆஃப் சென்னை விருது பெற்ற அதிரை இளைஞர் காலித்

அதிரை சேதுரோடு பகுதியை சேர்ந்தவர் காலித் அஹமது (23). சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர் அதிரையிலும், சென்னையிலும் தொடர்ந்து பல்வேறு விதமான சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். Crescent Blood Donors அமைப்பின் மூலம் இரத்தம் தேவைபடுபவர்களுக்கு உடனுக்குடன் சமூக வலைதளங்களின் மூலமாக இரத்தம் கிடைக்க வழிவகை செய்து வருகிறார். அதே போல, ஊரில் விபத்துகள் நடந்தால் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் தனது நண்பர்கள் உதவியுடன் அனுமதித்து உதவி செய்து வருகிறார்.

அது போக சென்னையில் இயங்கி வரும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களில் உள்ள இவர் தொடர்ந்து சாலை பாதுகாப்பு, இரத்ததான விழிப்புணர்வு, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து பள்ளிகளிலும் பொதுவெளியிலும் தனது நண்பர்களோட சேர்ந்து பிரச்சாரம் செய்துவருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதை விட மிகமுக்கியமாக உறவுகள் என்ற அமைப்பை நண்பர்கள் துணை கொண்டு தொடங்கிய காலித், அதன் மூலம் தினந்தோறும் ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்வதை ஒரு கடமையாகவே நிறைவேற்றி வருகிறார்கள். இதுவரை நூற்றுக்கணக்கான ஆதரவற்றோர்களின் சடங்களை மூலம் அடக்கம் செய்துள்ளார். இதற்காக இவரை பாராட்டி பல்வேறு நாளிதழ்கள் கட்டுரை வெளியிட்டுள்ளன.

இவர் ஆற்றிவரும் சமுதாய சேவைகளுக்கான் Awareness India Movement அமைப்பின் சார்பாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதை பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற ஹீரோஸ் ஆஃப் சென்னை விருது வழங்கும் விழாவில் காலித் அஹமதுக்கு ஹீரோ ஆஃப் சென்னை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பலரால் தேர்வு செய்யப்பட்டு இவர் இந்த விருதை பெற்றுள்ளார். தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் காலிதின் உறவுகள், சிபிடி அமைப்புகள் பல்வேறு மீட்பு, நிவாரண பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.