Adirai pirai
FLASH NEWS Gaza relief உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூராட்சியால் புறக்கணிக்கப்படுகிறதா காலியார்தெரு!

கஜா புயல் தாக்கி இன்றுடன் 11 நாட்களாகிய நிலையில் அதிரை காலியார் தெருவில் பேரூராட்சியால் இதுவரை எந்த ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கப்பட்ட வில்லை எனவும் சாலையில் கிடந்த மரங்களையும் குப்பைகளையும் இளைஞர்களே அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

காலியார் தெருவில் இன்று பேரூராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டதாகவும். ஒரு சில இடங்களில் குப்பைகள் அப்புறப்படுத்தவில்லை எனவும் சாலையோரம் கிடப்பதை கண்டுகொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.