Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் மின் வாரிய ஊழியர்களுக்கு விருந்தளித்த ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினர்.!

அதிரையில் கஜா புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று தற்போது பல இடங்களுக்கு மின்சார சேவை வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக வெளியூர்களில் இருந்து அதிகளவு மின்வாரிய பணியாளர்கள் அதிரைக்கு வருகை தந்து தீவிரமாக வேலை செய்து பணிகள் நிறைவடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.

அந்த பணியாளர்களையும் அதிகாரிகளையும் கவுரவிக்கும் விதமாக அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக லாவண்யா திருமண மண்டபத்தில் இன்று விருந்தளிக்கப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதுபோல உள்ளூர் மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு வீடு மக்களிடம் பணம் வாங்குவது போன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோ.