Adirai pirai
Gaza relief உள்ளூர் செய்திகள்

அதிரை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதா? இந்த பகுதியும் நம்ம ஊருக்குள்ள தான் இருக்கு…

நாமெல்லாம் கரண்ட் வந்துடிச்சு ஒரு சிலர் கரண்ட் வந்தும் எங்க வீட்டுக்கு வரலனு கவலையில இருக்கோம்.. ஆனா இவங்கள பாருங்க இருந்த இடத்த பறிகொடுத்துட்டு இருக்க இடம் இல்லாமல் பக்கத்து வீட்லையும் தெரிந்தவர்கள் வீட்லையும் தங்கி இருகாங்க… இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. அதிலும் பிள்ளை இல்லாத மக்கள் வேறு. நீங்கள் உதவ நினைத்தால் உதவி செய்யுங்கள்.

இடம் தைக்கால் தெரு,அதிராம்பட்டினம்.

அதிரையில் குறிப்பிட்ட சில தெருக்களில் மின்சாரம் கிடைத்துவிட்டதை வைத்து ஊர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக நினைக்காமல், இந்த பகுதிகளை ஊரின் அங்கமாக கருதி உதவிடுவோம்.