Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

அதிரையில் கஜா நிவாரணப்பணியில் ஈடுபட்ட இளம் சிங்கங்களுக்கு கவுரவிப்பு


கஜா புயலால் பெரிதும் பாதிப்புக்கு ஆளான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு தன்னார்வலர்கள் ஒன்று மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் இடைவிடாமல் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளிவாசலை நிவாரணக்குழுக்களின் மையமாக அமைத்தும் அங்கு நிவாரணப்பொருட்களை சேர்த்து அங்கிருந்து சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்களுக்கு அவை சென்று சேர்க்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு எந்த வகையிலும் சளைக்காமல் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சிறுவர்களும் தங்களால் இயன்ற பல்வேறு உதவிகளை செய்தனர்.

கஜா புயல் தாக்கி 15 நாட்கள் கடந்துள்ள நிலையில் நேற்றைய தினம் அல் அமீன் பள்ளிவாசலில் தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிவாரணப்பணிகளில் பம்பறாம் சுழன்று பணியாற்றி சிறுவர்களுக்கு பொன்னாடை போற்றி கவுரவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஊர் மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.