Adirai pirai
INFORMATION islam தமிழகம்

பள்ளிவாசல் இமாம்கள், மோதினார்கள் உதவித்தொகை, ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசு சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் நல வாரியம் செயல்பாட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 முதல் 60 வயது உடையவர்கள் பதிவு செய்யப்பட்டு அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டை உடையவர்கள் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். 60 வயதை அடைந்து ஓய்வு பெற்றவர்கள் ஒய்வுதியம் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சிங்காரவேலர் மாளிகை, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இது சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு. சட்டப்படி இது அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பள்ளிவாசல், முஹல்லா நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்து பள்ளிகளில் பணிபுரியும் இமாம்கள், மோதினார்களுக்கு உதவிட முன்வர வேண்டும்.