Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே – கருசக்காட்டில் தீ விபத்து!

அதிரை – முத்துப்பேட்டை சாலையில் அமைந்துள்ள கிராமம் கருசக்காடு இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இன்று இரவு அப்பகுதியில் குடிசை ஒன்று திடீரென தீ பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் போராடி தீயை அனைத்தனர். தீயணைப்பு இயந்திரம் வருவதற்குள் தீ அனைக்கப்பட்டது.

இந்த வீடு மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான வீடு எனவும் அவர் நாள் கூலிக்கு வேலை செய்து வருபவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த வீட்டில் வைத்திருந்த பணம் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து முழுவது தீயிக்கு இரையானதாக வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.