Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் அனாமத்தாக கிடக்கும் தகர கூரைகள்.!

கஜா புயலால் சேதமடைந்த தகர கூரைகள் பல இடங்களில் அள்ளப்படாமல் கிடக்கிறது.

லட்சங்கள் செலவு செய்து வாங்கி தற்போது அனாமத்தாக கிடக்கிறது. இதனை உரிமையாளர்களே வேறு தேவைக்கு பயன் படுத்தலாம் அல்லது அவரவர் அப்புறப்படுத்தினால் பல விளைவுகளை தவிர்த்து கொள்ளலாம்.

இதில் மழை நீர் தேங்குவதுடன் கொசு உற்பத்தியாக அதிகம் வாய்புள்ளதாகவும் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.