Adirai pirai
உள்ளூர் செய்திகள்

சிக்குன்குனியாவில் சிக்கித் தவிக்கும் அதிரை மக்கள்

அதிரையில் கஜா புயல் பாதிப்புகள் ஓராளவு தணிந்திருக்கும் சூழலில் தற்போது சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இந்த கடுமையான காய்ச்சலால் நடக்க இயலாமல், கை கால்களை கூட அசைக்க முடியாத கடுமையான வலி ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அதிரை ஹாஜா நகரில் இதன் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு சுகாதார அலுவலர்கள் இந்த பகுதியினை ஆய்வு செய்து வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுபடுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஹாஜா நகர் பகுதிகளில் அள்ள படாமல் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குப்பைககே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கடற்கரைத்தெரு பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களும் இச்சாலையின் வழியாக தான் அதிகம் செல்கின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது பேரூராட்சியின் கடமை.