முத்துப்பேட்டையில் பரபரப்பு வாக்காளர் பட்டியலில் ஆதார், செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாமிற்கு அலுவலர்கள் வராததால் பார்வையிட வந்த அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள்!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் வாக்காளர் பட்டியல் செம்மை படுத்தும் பணிக்கான தொடர் திருத்தம் நேற்று ஏப்ரல் 12-ஆம் தேதி மற்றும் 26, மே 10, 25 ஆகிய நாட்களில் அந்த அந்த வாக்கு சாவடிகளில் நடைபெறும் என்றும், இந்த முகாமில் பொதுமக்கள் ஆதார் என்னை இணைப்பதுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் செல்போன் எண் பதிவு ஆகியவைகளை முகாமில் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி கடந்த பல நாட்களாக வருவாய் துறை அதிகாரிகள் முகாம் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை நகரத்தில் 12 வாக்கு சாவடிகளில் முகாம் அமைக்கப்பட்டது. அதனால் நேற்று காலை 10 மணி முதல் அனைத்து முகாமிலும் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் கூடினர். பெரும்பாலான வாக்கு சாவடிகளில் அதிகாரிகள் காலத்தாமதமாகவே வந்தனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை தெற்குத்தெரு பேட்டை சாலையிலுள்ள மதியழங்காரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று காலை 10 மணி முதல் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் தீனதயாளன் மட்டும் வந்திருந்தார். பகல் 1 மணியாகியும் மற்ற அலுவலர்கள் யாரும் வரவில்லை. அதற்கான விண்ணப்பங்களும் பள்ளிக்கு வந்து சேரவில்லை. 

இதனால் காத்திருந்த மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பொழுது அங்கே வந்த அ.தி.மு.க பேரூராட்சி கவுன்சிலர் நாசர் உயர் அதிகாரிகளுக்கு தொலைப்பேசி மூலம் தகவல் கொடுத்தார். அதிகாரிகள் இதனை அலட்சிய படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் போராட்டம் நடத்த தயாரானார்கள். இந்த நிலையில் எதார்த்தமாக வாக்கு சாவடியை பகுதி தேர்தல் பார்வையாளர் பரமசிவம் பார்வையிட வந்தார். அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். உடன் தேர்தல் பார்வையாளர் பரமசிவம் இந்த வாக்கு சாவடிக்கு நியமணம் செய்யப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் விடுமுறை போட்ட விபரம் தெரிந்தது. 

இதனால் வேறு வழியின்றி மதியம் 1.30 மணி முதல் தேர்தல் பார்வையாளர் பரமசிவம் தானே அமர்ந்து மக்களிடம் பதிவுக்கு தேவையான ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடைய அட்டை நகல் மற்றும் செல்போன் நம்பர் ஆகியவைகளை மனுக்களாக மாலை 5 மணி வரை பெற்றுக் கொண்டார். இதில் 300-க்கும் மேற்பட்ட மனுக்களை மட்டுமே அவரால் பெற்றுக் கொள்ள முடிந்தது. இது குறித்து தேர்தல் பார்வையாளர் பரமசிவம் கூறகையில் இந்த முகாம் 4 வாரம் நடைபெறுகிறது. இன்றைக்கு அதிகாரிகள் திடீரென்று விடுமுறை எடுத்ததால் இந்த சம்பவம் நடந்த விட்டது. அடுத்த வாரம் வேறொரு அலுவலர் நியமிக்கப்பட்டு பணி நடைபெறும் என்றார். இது குறித்து கவுன்சிலர் நாசர் கூறுகையில்: அறிவிப்பை கேட்டதும் மக்கள் அனைவரும் கடமையோடு வந்திருந்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் அனைவரும் பல மணி நேரம் காத்திருந்து திரும்பி சென்றுவிட்டனர். இதற்கு சம்மந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

படம் செய்தி: 
1.முத்துப்பேட்டையில் வாக்கு சாவடிக்கு அலுவலர்கள் வராததால் தன்னை முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும் தேர்தல் பார்வையாளர் பரமசிவம். 
2. தானே அமர்ந்து மக்களிடம் மனுக்கள் பெரும் தேர்தல் பார்வையாளர் பரமசிவம். 
3. கவுன்சிலர் நாசர்.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மு.முகைதீன்பிச்சை

முத்துப்பேட்டை

Advertisement

Close