போலி என்கவுண்டரை கண்டித்து அதிரையில் SDPI கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

ஆந்திரா தெலுங்கானாவில் நடைபெற்ற அரசு பயங்கரவாத என்கவுண்டரை கண்டித்தும் வழக்கை CBIக்கு மாற்றக் கோரி இன்று மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.    

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அதிரை நகர தலைவர் U.அப்துர் ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையினை கேம்பஸ் டுடே  பத்திரிகை ஆசிரியர் வழக்கறிஞர் .அதிரை முகம்மது தம்பி,SDPI மாவட்ட செயற்குழு உறுப்பினர் J.ஹாஜி ஷேக் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

முன்னதாக மதுக்கூர் நகர பொருளாளர் சமீர் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மாவட்ட துணை தலைவர் M.அமானுல்லா அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.

 

Advertisement

Close