அதிரையில் விபத்துகளை தடுக்கும் விதமாக வேகத்தடை அமைக்க கோரி SDPI கட்சியினர் வலியுறுத்தல்!

அதிரை கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களின் அதிவேகத்தால் தொடர் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.இதை தடுக்க கோரி SDPI கட்சியின் அதிரை நகரத் தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று மாலை அதிரை காவல் ஆய்வாளரை சந்தித்து மனு ஒன்று அளித்தனர்.

அதன் விபரம் இதோ:

அதிரை கிழக்கு கடற்கரை சாலையில் ஜாவியா ரோடு இணையும் இடத்திற்கு அருகில் கல்லூரியும்,மேல் நிலை பள்ளி கூடமும் செயல்பட்டு வருகிறது.இதில் ஆயிரகணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.இம்மாணவர்கள் அனைவரும் மேற்ப்படி கிழக்கு கடற்கரை சாலை வழியாக தான் தங்கள் கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் +2 தேர்வு எழுதி விட்டு வந்த மாணவர்கள் மீது லாரி மோதியதில் இருவருக்கு காலில் பலத்த கொடுங்காயம் ஏற்ப்பட்டது.

மாநில நெடுஞ்சாலையான இச்சாலையில் நெடுந்தூரம் செல்லும் வாகன ஒட்டினர் வேகத்தை குறைகாமலே வருவதால் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.மேலும் பெரும் விபத்து ஏற்பட்டு அதிகளவில் உயிர்ப்பலிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.தங்கள் பிள்ளைகளை பள்ளி கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோர் பிள்ளைகள் வீடு திரும்பு வரை தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தான் உள்ளனர்.சாலையில் தடுப்புகளை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்துவதன் மூலம் விபத்துகளை தடுக்க முடியும்.

இன்று காலை கொள்ளுகாடு பேருந்து நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் பேருந்து மோதி உயிர் இழந்தான்.இதனையடுத்து மேற்படி ஜாவியா ரோடு சந்திப்பு அருகே மட்டும் வேகதடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.இதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள் கல்லூரி அருகிலும் அதிவேகமாக வருகின்றனர்.

எனவே ஐயா அவர்கள் இது விசயத்தில் தலையிட்டு.மேற்ப்படி கிழக்கு கடற்கரை சாலையில் முத்தம்மாள் தெரு ஆர்ச் முதல் காதிர் முகைதீன் கல்லூரி மெயின் கேட் வரையிலும் மற்றும் பவித்ரா திருமண மண்டபம் அருகிலும் தடுப்புகளை அமைத்து விபத்துகள்  ஏற்ப்படா வண்ணம் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.  

Advertisement

Close