அதிரையில் நடைபெற்ற மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!(படங்கள் இணைப்பு)

அதிரையில் திமுக சார்பில் மு.க ஸ்டாலின் 63வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று (06-04-2015) மாலை 6.30 மணியளவில் பேருந்து நிலையத்தில் துவங்கியது.இந்த பொது கூட்டதிற்கு பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி.பா.ராமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த பொது கூட்டதிற்கு S.S.பழநிமாணிக்கம் (கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்),திரு.துரை.சந்திரசேகரன் (தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர்),  S.S.ராஜ்குமார், ஏனாதி.ப.பாலசுப்ரமணியன், திரு.இராம.குணசேகரன் (பேரூர் கழக செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.முன்னதாக நகர அவைத்தலைவர் H.அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

இதனையடுத்து திரு.கவிச்சுடர்.கவிதைபித்தன் (மாநில இலக்கிய அணி செயலாளர்)அவர்கள்,திரு.இளங்கோவன்,திரு.கவிஞர்.வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.இறுதியாக அதிரை நகர துணை செயலாளர் A.M.Y.அன்சர்கான் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். 

இந்த பொது கூட்டதிற்கு திமுக மாவட்ட,ஒன்றிய,பேரூர்,கிளை, நிர்வாகிகள், அதிரை பேரூர் வார்டு உறுப்பினர்கள், திமுக ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.     

Advertisement

Close