காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற ஆங்கிலத்துறை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி!

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கிலத்துறை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத்துறை மாணவர் M.முகம்மது ஹம்ஸா அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறை மாணவி R.நாகஜோதி வரவேற்புரை வழங்கினார்.முன்னதாக கல்லூரி முதல்வர் டாக்டர்.A.ஜலால் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். கல்லூரி மாணவ, மாணவியரின் வருங்கால வெற்றிக்கும், நல்வாழ்வுக்கும் அனைத்து துறை பேராசிரியர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு டாக்டர்.A.முகம்மது முகைதீன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள், அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
காலித் அஹ்மத்


Advertisement

Close