அதிரை அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவருக்கு பலத்த காயம்!(படங்கள் இணைப்பு)

அதிரை அருகே மழவேனிற்காடை சேர்ந்த சிவாசக்தி இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.வழக்கம்போல் இன்று காலை 11.30 மணியளவில் கல்லூரி முடிந்து பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அதிரை அருகே நடுவிக்காடு வந்த போது திடீரென சிவசக்தி பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்தாராம்.இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது.மேலும் காதில் இருந்து இரத்தம் வந்து கொண்டு இருந்தது.

தகவல் அறிந்த அதிரை இளைஞர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அந்த மாணவனை பைக்கில் வைத்து அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தஞ்சைக்கு பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று உள்ளனர்.மேலும் அதிரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து விசாரித்த விதத்தில் :
அந்த மாணவன் பேருந்து படிக்கட்டில் தொங்கி கொண்டு வந்ததாகவும் அந்த மாணவனை பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பல முறை எச்சரிக்கை செய்தும் அவர் படிக்கட்டில் இருந்து மேலே வரவில்லை என்று அந்த பேருந்தில் பயணித்த ஒருவர் நம்மிடன் கூறினார்.

Advertisement

Close