Adirai pirai
posts

DR.PIRAI-நல்லெண்ணையின் மருத்துவத்தன்மைகள்!

தமிழர்களால் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய், உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.

நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் எ‌ன்ற பொரு‌ள் ரத்தத்தில் இரு‌க்கு‌ம் அ‌திக‌ப்படியான கொழு‌ப்பை‌க் குறைக்கிறது.இதில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் இரு‌க்க வே‌ண்டிய நல்ல கொழு‌ப்பை அதிகரிக்கிறது.

ந‌‌ல்லெ‌ண்ணெ‌ய் கு‌ளி‌ர்‌ச்‌சியை‌த் தருவதோடு ‌கிரு‌மி நா‌சி‌னியாகவு‌ம் உடலு‌க்கு‌ப் பய‌ன்படு‌கிறது. வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌சி‌றிது ந‌ல்லெ‌ண்ணெ‌ய் குடி‌ப்பது குடலு‌க்கு‌ ந‌ல்லது. நல்லெண்ணெயை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று கூறலாம். இதற்கு அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே காரணம்.

வைட்டமின் மற்றும் தாது உப்புகள்:
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.

நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.

இனிப்பு, கசப்பு, காரம்:
நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களைப் போக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.
கண்நோய்கள் நீங்கும்

நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆயுள் புல்லிங்
உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெயின் பங்கு முக்கியமானது. உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை. சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது. பாக்டீரியாகொல்லி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பாதங்களில் ஏற்படும் பூஞ்சை நோய்களை போக்க வெண்ணீரில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பாதத்தை கழுவினால் நோய் தீரும்.

ஆயுர்வேதத்தில் ஆயுல்புல்லிங் எனப்படும் மருத்துவமுறை உடலை உற்சாகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கரண்டி எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி நன்றாக நுரை வர கொப்பளித்து துப்பினால் பற்களும் ஈறும் பலப்படும். உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.

நல்லெண்ணையின் பயன்கள்:
நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும், கொலஸ்டிராலைக் குறைக்கும் லெக்சிதின் என்ற பொருளும் உள்ளதால், உடலிலும் இரத்தக் குழாய்களிலும் கொழுப்புக் சேராது. தொப்பை விழாது. இளமைத் தோற்றத்துடன் ஆரோக்கியமும் தொடர்கிறது.

நல்லெண்ணெய் நோயை முறிக்கும் முறிவு மருந்தாகும். நல்லெண்ணெயில் சமைத்த உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் கெடாமலிருப்பதைக் குடும்பத்தலைவிகள் அறிந்திருப்பார்கள். செசாமின் என்ற பொருள் நல்லெண்ணெயில் இருப்பதால், வாதம், இதய நோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது.

நல்லெண்ணெயை நன்கு சூடுபடுத்திப் பயன்படுத்தினால், நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் மூலப்பொருட்களின் ஆற்றல் இந்த எண்ணெயில் உள்ளது. வாழ்க்கையில் வெறுப்பு, கவலை, மனச்சோர்வு முதலியவற்றைத் தடுக்கும் பைரோரெஸினால் என்ற அமிலப் பொருளும் நல்லெண்ணெயில் இருக்கிறது.

உடல் நலத்தையும் தந்து, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும் முதல் தர எண்ணெய் நல்லெண்ணெய்தான். நல்லெண்ணெய்க் குளியலால் தோல் மிருதுவாகிறது.

பண்டைய இந்திய மருத்துவரான சரகா மிகச்சிறந்த எண்ணெய் எள் எண்ணெய்தான் என்று கூறியுள்ளார். இரும்புச் சத்து, கால்ஷியம், பி-வைட்டமின்களும் இதில் உள்ளன. மூலத் தொந்தரவு, மாதவிலக்குத் தொந்தரவு, மூச்சுக்குழல் பிரச்னைகள், தோல் தொல்லை முதலிய பிரச்னை உள்ளவர்கள் எள்ளுருண்டையை தவறாமல் சாப்பிட்டு வரவும். நல்லெண்ணெயையும் சமையலில் பயன்படுத்தவும் சுத்திகரிக்கப்பட்ட நல்லெண்ணெய்யே எப்போதும் சிறப்பு.

பகல் உணவில் நெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய்யுடன் சாதத்தைப் பிசைந்து சாப்பிடுவது நல்லது. தோசைப் பொடி, இட்லிப்பொடிக்கு இனி நெய்யைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நமது குடலில் கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் உப்புகள் நன்கு செரிக்கப்படுவது எளிதாகிறது.

எனவே, நல்லெண்ணெயிலேயே நமது உணவு வகைகள் இனி தயாராகட்டும். ஆயுளும், இளமையும் எளிதில் நீடிக்க இந்த எண்ணெயே அரு மருந்து.எள்ளுருண்டை சாப்பிடும் குழந்தைகள் இரத்தசோகை நோய்க்கு உள்ளாவதில்லை. இரத்த சோகை நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எள்ளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் சர்க்கரையுடன் சேர்த்து கலக்கி அருந்தி வருவது நல்லது.

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy