அதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய கண் அறுவை சிகிச்சை செய்தோர்களுக்கான பரிசோதனை முகாம்!

அதிரை லயன்ஸ் சங்கம்,காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் கடந்த (05-03-2015) அன்று சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் 58 பேர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சை சிறப்பாக நடைபெற்றது.

இதனையடுத்து இன்று (02-04-2015) காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அனைவருக்கும் சிறப்பு முகாம் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் அனைவரையும் பரிசோதித்தார். மேலும் அனைவருக்கும் மருத்துவரால் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு  லயன்ஸ் சங்கத் தலைவர் சாகுல் ஹமீது,லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது,சாரா அஹமது மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Close