Adirai pirai
posts

அதிரையில் சக்கைபோடு போடும் கரும்பு ஜூஸ் விற்பனை!

தற்போது பகலில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க அதிரையில் கரும்பு ஜூஸ் வியாபாரம் களை கட்டியுள்ளது.கோடையில் வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உடலுக்கு குளிர்ச்சியூட்டும் இயற்கை பானங்களை மக்கள் விரும்பி பருகுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். செயற்கை குளிர்பானங்களைவிட இளநீர், பழச்சாறு, கரும்பு ஜூஸ் ஆகிவற்றை பருகுவதாலும், தர்பூசணி, வெள்ளரி போன்றவைகளை சாப்பிடுவதாலும் பக்கவிளைவுகள் ஏதும் இன்றி, உடலின் வெப்பத்தை தணிக்கிறது. 

அதிரை பேருந்து நிலையம் அருகில் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்யும் முகன் அவர்கள் நம்மிடம் கூறுகையில்:
நான் பல வருடங்களாக பல பகுதிகளில் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறேன்.இந்த வருடம் உங்கள் பகுதியில் வியாபாரம் செய்ய வந்து உள்ளேன். இந்த கரும்பு ஜூஸ் மஞ்சள் காமாலை, தொற்றுநோய்கள்,சிறுநீரக கற்கள்,புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஒரு மருந்தாக உள்ளது.மேலும் மதியவேளையில் கரும்பு சாறுடன், எலுமிச்சை, இஞ்சி கலந்து அதனுடன் ஐஸ் போட்டு விற்பனை செய்யப்படும் ஜூஸ் சுவையாக இருக்கும். உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ குணம் உள்ள கரும்பு ஜூசை வாங்கி சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுவதால் இந்த வியாபாரம் தற்போது சக்கை போடு போடுகிறது என்றார்.அதிரையில் களைக்கட்டி விற்பனையாகும் கரும்பு ஜூஸ் விலை ரூ.15 மட்டும் என்றார்.

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy