அதிரையில் நடைபெற்ற அல்-ஷனா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 4 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி!(படங்கள் இணைப்பு)

அதிரையில் நடைபெற்ற அல்-ஷனா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 4 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று (31-03-2015) மதியம் 2.30 மணியளவில் லாவண்யா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு திரு.S.கணபதி சுப்ரமணியன் (மாநில மற்றும் தேசிய விருது பெற்ற நல்லாசிரியர்,தலைவர் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி கூட்டமைப்பு), Rtn.T.சுப்பராயன் (தாளாளர்,பெட்ரண்ட் ரசல் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஜனாப்.LION.M.I.நெய்னா முகம்மது அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மேலும் உயர்திரு. M.K.இராமமூர்த்தி (தஞ்சை மாவட்ட நர்சரி பள்ளிகள், உதவி தொடக்கப்பள்ளி அலுவலர்) அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். இதனைதொடர்ந்து திரு.காந்திலெனின் (மாநில பொது செயலாளர், தமிழ்நாடு முத்தமிழ் அறிவியல் மன்றம்), திரு.D.சுவாமிநாதன் (தலைவர்,பட்டுக்கோட்டை ரெட் கிராஸ் சொசைட்டி), ஹாஜி.A.முனாப் (அட்வகேட்), திரு.S.R.ஜவகர் பாபு (நகர் மன்ற தலைவர்,பட்டுக்கோட்டை), திரு.விழிகள்.C.ராஜ்குமார் (பட்டதாரி தமிழாசிரியர்.மாநில துணை தலைவர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர்.செய்யது அகமது கபீர் (காதிர் முகைதீன் கல்லூரி),திரு.S.சம்பத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதனைதொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சன் டிவி புகழ் “லாட்ஜ் இல்லா மேஜிக்”&பொதிகை புகழ் “மாயா மாயா” இது போன்ற எண்ணற்ற டிவி,திரைப்படங்களில் கண்டுகளித்த கல்கத்தா புகழ் ஜாதுகர் அப்துல்லா  அவர்களின் மாயாஜால நிகழ்ச்சி நடைபெற்றது. 

முன்னதாக பள்ளியின் சாதனைகளை பட்டியல்யிட்டு  திருமதி.M.ஜென்னத்துல் நய்மா (அல் ஷனா பள்ளி செயலாளர்), திருமதி.F.சபுருன் ஜமீலா (உதவி தலைமையாசிரியை) ஆகியோர் ஆண்டறிக்கை வசித்தார்கள். இதனைதொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றது.இறுதியாக நன்றி உரையினை செல்வி.S.கிறிஸ்டி (அல் ஷனா பள்ளி தலைமையாசிரியை) நிகழ்த்தினார்கள். 

Advertisement

Close