அதிரையில் SDPI நடத்திய தெருமுனைப் பிரச்சாரம்! (படங்கள் இணைப்பு)

மக்கள் விரோத நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஏற்றும் பா.ஜ.க அரசை கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் பிரச்சார இயக்கம் ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதிரை தக்வா பள்ளி அருகே தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. இதற்க்கு அதிரை நகர துணைத் தலைவர் V.C.நடராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னிலை அதிரை நகர செயலாளர் இக்பால் மற்றும் இணை செயலாளர் நூருல் அமீன் ஆகியோர் வகித்தனர்.

இதில் சிறப்பு பேச்சாளராக கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினரும் கேம்பஸ் டுடே பத்திரிக்கையின் ஆசிரியருமான வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி அவர்களும்.  தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக் அவர்களும் கலந்துக்கொண்டனர். இறுதியாக மாவட்ட செயலாளர் அபுல் ஹசன் அவர்கள் நன்றியுறையாற்றினர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close