மனிதநேயக் காவலர் விருது பெற்ற காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அகமது கபீர்!

தஞ்சாவூர் மாவட்டம் முத்தமிழ் அறிவியல் மன்றம் சார்பாக வருடா வருடம் உழவனின் காவலர் விருது,கல்வி காவலர் விருது,மனிதநேயக் காவலர் விருது,நீதியின் காவலர் விருது,சேவை செம்மல் விருது, தூய்மையின் காவலர் விருது போன்றை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (31-03-2015) மாலை லாவண்யா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முத்தமிழ் அறிவியல் மன்ற பொது செயலாளர் திரு.காந்திலெனின்,திரு.M.I.நெய்னா முகம்மது (தலைவர்,முத்தமிழ் அறிவியல் மன்றம்,அதிரை),திரு.இராசேந்திரன் (தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர்,தஞ்சை மாவட்டம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்களின் விபரம்:
  
மனிதநேயக் காவலர் விருது:
பேரா.கா.செய்யது அகமது கபீர் (காதிர் முகைதீன் கல்லூரி,அதிரை)

நீதியின் காவலர் விருது:
வழக்கறிஞர்.அ.அப்துல் முனாப் (அதிரை)

உழவனின் காவலர் விருது:
அரிமா.இராஜேந்திரன் (தமிழக காவிரி விவசாயிகள் சங்க துணை தலைவர்,பரவாக்கோட்டை)

கல்விக் காவலர் விருது:
மா.க.இராமமூர்த்தி (உதவி தொடக்க கல்வி அலுவலர்,தஞ்சை மாவட்டம்)

சேவை செம்மல் விருது:
அரிமா.ந.உ.இராமமூர்த்தி (நிர்வாக இயக்குனர்,பி.ஆர்.எம் டிராவல்ஸ், பட்டுக்கோட்டை)

தூய்மையின் காவலர் விருது:
வ.விவேகானந்தன்,(வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர், தாமரங்கோட்டை) ஆகியோர் விருதுகள் பெற்றனர்.

விருது பெற்ற அனைவருக்கும் அதிரை பிறை வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.       

செய்தி மற்றும் படங்கள்:
காலித் அஹ்மத்(அதிரை பிறை நிருபர்) 

Advertisement

Close