சீனாவில் இஸ்லாமிய தம்பதியினருக்கு நேர்ந்த கொடுமை

சீனாவில் குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதி ஒன்றில் தாடி வளர்த்த நபர் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கஷ்கர் என்ற பாலைவன நகர நீதிமன்றம் ஒன்று, 38 வயதான நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க உத்தரவிட்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அந்நபர் தாடி வளர்த்து வந்ததாகவும் அந்நபரின் மனைவியும் தனது முகத்தை மறைத்து பர்தா  அணிந்திருந்ததற்காகவும் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.  

இருவரின் செயல்பாடுகளும், சண்டையை உருவாக்குவதாவும், பிரச்சினையை தூண்டுவதாகவும் இருந்ததாக கூறி நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது.

கடந்த ஒரு வருடமாக தாடி வளர்ப்பது குற்றம் என அந்நாட்டு அரசு பல இடங்களில் விளம்பரம் செய்து வருகிறது. அதே போல் ‘அழகு திட்டம்’ என்ற பிரச்சாரத்தின் மூலம், பெண்களை ஊக்கப்படுத்துவதுடன், முகத்தை மறைக்கும் ஆடையை உடுத்தவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு இருவருக்கும் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், அவர்கள் கண்டுகொள்ளாததால், இருவர் மீதும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close