அதிரையில் தண்ணீர் திருட்டா?

அதிரை மிலாரிக்காட்டில் இருந்து அதிரை மேலத்தெருவில் உள்ள தண்ணீர் தேக்கத் தொட்டியில் நிரப்பப்படுகிறது. இந்த தண்ணீர் தேக்க தொட்டியில் இருந்து அதிரை மேலத்தெரு, கீழத்தெரு, வெற்றிலைகாரத்தெரு, காலியார் தெரு, நடுத்தெரு, வாய்க்கால் தெரு, ஆஸ்பத்திரி தெரு, புதுத்தெரு, திலகர் தெரு, கடற்கரைத் தெரு, ஹாஜா நகர், தரகர் தெரு போன்ற தெருக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனால் அதிரையிம் பெரும்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மிலாரிக்காட்டில் இருந்து மேலத்தெரு தண்ணீர் தேக்க தொட்டிக்கு செல்லும் தண்ணீர் மிகவும் மெதுவாக நிறம்புவதாகவும் இதனால் தூரத்தில் உள்ள தெருக்களுக்கு தண்ணீர் செல்வது தாமதிப்பதாகவும் புகார் வந்ததை அடுத்து EO தலைமையில் ஒரு குழுவினர் தண்ணீர் டாங்கிக்கு சென்று ஆராய்ந்தனர். இதில் மிலாரிக்காட்டில் இருந்து தண்ணீர் தேக்க தொட்டிக்கு செல்லும் தண்ணீர் பாதையில் சட்டவிரோதமாக தண்ணீர் நேரடியாக அருகில் உள்ள வீடுகளுக்கு செலுத்தப்படுவது தெரியவந்தது. இதனை அடுத்து EO தண்ணீரை நேரடியாக எடுத்துக்கொள்ளும் வீடுகளுக்கு சென்று இது குறித்து கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் பல வருடங்களாக இவ்வாறு தான் பயன்படுத்தி வருகிறோம் என்றும் இனி தண்ணீர் லைனை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு செல்லும் பாதையிலே தண்ணீரை வீடுகளுக்கு திருப்பி விடுவதால் தண்ணீர் தொட்டி நிறைவது தாமதமாவது மற்றுமின்றி ஏனைய பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட வீட்டார்கள் அதிரையில் உள்ள அனைத்து மக்களின் நலன் கருதி நேரடி தண்ணீர் லைனை அடைத்து விட்டு தண்ணீர் தேக்க தொட்டியில் இருந்து பெறும் தண்ணீரை உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறொம்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close