வேலூரில் இஸ்லாமிய பெண் படுகொலை! தொடரும் பதற்றம்!


வேலூர் மாவட்டத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு ….

வேலூர் மாவட்டம் நரியம்பட்டை சேர்ந்தவர் ஷேபாஸ் அஞ்சும் (வயது 32) இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

ஏழ்மை நிலையில் உள்ள இவர் குடியாத்தத்திலுள்ள பள்ளி ஒன்றில் அரபி ஆசிரியராக பணி புரிகிறார்.

இந்நிலையில் …

நேற்று இரவு வைத்னாகுப்பம் என்ற இடத்தில் ஆடைகள் கிழிக்கப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்த பிறகே இந்த பெண் கற்பழிக்கப்பட்டாரா என்பது போன்ற கூடுதல் தகவல் கிடைக்கும்.

இதற்கிடையில் இவரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யாதவரை உடலை பெற மாட்டோம் என்று பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உறவினர்களின் போராட்டத்தில் தமுமுக, SDPI முஸ்லிம் லீக் கட்சியினரும் பங்கு கொண்டுள்ளனர்.

மேற்குறித்த செய்தியை ஏறாவூரில் சர்மிளா செய்யித் என்ற பெண்னோடு தொடர்புபடுத்தி இணையத்தளங்கள் போலியான செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பதனை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஏறாவூர் பெண் கொலை என்ற செய்தியில் உண்மையில்லை இதனை யாரும் நம்ப வேண்டாம்.

Advertisement

Close