முத்துப்பேட்டையில் நடைபெற்ற தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம்!(படங்கள் இணைப்பு)

முத்துப்பேட்டையில் தமுமுகவின் 2 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா , கழக கொடியேற்றும் நிகழ்ச்சி, மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

இதற்கு தமுமுக முத்த தலைவர் அண்ணன் ஹைதர் அலி மற்றும் 
தமுமுக மாநில பொதுச்செயலாளர் சகோதரர் ப.அப்துல் சமது ஆகியோர் அனைத்து சமுக மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணித்து எழுச்சியுரை ஆற்றினார்கள்.சகோ பழனி ஃபாரூக்,சகோ நாச்சிகுளம் தாஜ்தீன், சகோதரர் மதுக்கூர்.K.ராவுத்தர்ஷா,M.முஜிபுர் ரஹ்மான் (மாவட்ட தலைவர்) ஆகியோர்   சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் ,ஊர் முக்கிய பிரமுகர்கள்,முன்னிலை வகித்தனர் ஏராளமான பொதுமக்கள் கல்ந்து கொண்டார்கள்.நிகழ்ச்சியை முத்துப்பேட்டை தமுமுகவினர் சிறப்பாக ஏற்ப்பாடு செய்து இருந்தார்கள்

Advertisement

Close