அதிரையில் அனைத்து கடைகளும் பேருந்துகளும் வழக்கம் போல இயக்கம்! (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில அணை கட்டுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளனர். 

விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தொமுச போன்ற எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்காததால் குறைவான பேருந்துகளே ஓடுகின்றன. போராட்டத்தை ஒட்டி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆனால் அதிரையை பொருத்தமட்டில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வியாபாரம் நடைப்பெற்று வருகிறது. அதிரை மெயின் ரோடு, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கடையடைப்புக்கான தடங்களே இல்லை. அது போல் பெருந்துகளும் வழக்கம் போல ஓடுகின்றன.

படங்கள்:பிலால் (அதிரை பிறை)

Advertisement

Close