தீவிரவாதி என கைது செய்யப்பட்டவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என விடுதலை!

சிமி’ எனும் இஸ்லாமிய மாணவர் அமைப்பை 2001இல் பாஜக தலைமையிலான என்டிஏ அரசு தடை செய்தது.

அப்போது சிமியின் அகில இந்தியத் தலைவராகஇருந்தவர் ஷாஹித் பதர் என்பவர்.இவர் அலிகர் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று ஆஸம்கரில் யூனானி மருத்துவராகச் சேவையாற்றிக் கொண்டிருந்தவர்.

தேசத் துரோகக் குற்றச்சாட்டு உட்பட இரு சமூகங்களிடையே வெறுப்பைத் தூண்டினார் என்றெல்லாம் சொல்லி 2001இல் டெல்லி போலீசார்இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

ஆனால் இப்போது-அதாவது 14 ஆண்டுகளுக்குப் பிறகு- இவர் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டையும் காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி பாட்டியாலா ஹவுஸ் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சஞ்சய் கனக்வால் ஷாஹிதை விடுதலைசெய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Close