பாபர் மசூதியை தொடர்ந்து தாஜ்மஹாலை குறி வைக்கும் RSS அமைப்பினர்!

தாஜ் மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கவேண்டும் என்று ஆக்ரா நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர்கள் நாடியுள்ளனர். 

ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் என்பவர் உள்ளிட்ட 6 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் தரப்பில்,” தாஜ்மஹால் இருக்கும் இடம் முற்காலத்தில் கல்லறையாக இருந்ததில்லை.அங்கு சிவன் கோவில் மட்டுமே இருந்தது.அந்த இடத்தை   ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கியுள்ளார்.இந்துக்கள் வழிபாடு செய்த இடம் பின்னர் கல்லறையாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் இந்துக்கள் அங்கே சிவ வழிபாடு நடத்த அனுமதி தரவேண்டும்.ஒருபோதும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் தற்போது இந்திய தொல்பொருள்துறையின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Courtesy:VIKADAN

Advertisement

Close