அதிரையில் மறைந்து போகும் ஆடு மாடுகள்!

அதிரையில் கடந்த சில நாட்களாக ஆடு மாடுகள் திருட்டு அதிகரித்து வருகிறது. சென்ற வாரம் பகிரங்கமாக பட்டப்பகலில் சில ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி திருட முயன்ற கும்பலை இளைஞர்கள் மடக்கிப்பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். இந்த ஆடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு திருடப்படும் கால்நடைகள் அதிரையை சுற்றியுள்ள ஊர்களில் கறிக்காகவும், தோல்களுக்காகவும் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிரையில் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித் திரியும் கால்நடைகள் அதிகம் கடத்தப்பட்டு விற்க்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக அதிரை பழஞ்செட்டித் தெருவில் அதிகளவில் ஆடு மாடுகள் காணாமல் போவதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே கால்நடைகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதனை எச்சரிக்கையாக பார்த்துக்கொள்ளுமாறும் அவற்றை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் மேய விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close