அதிரையில் 24 மணி நேர மருத்துவ வசதியை ஏற்படுத்த சேர்மன் அஸ்லம் அவர்களின் புதிய முயற்சி!

சமீப காலங்களில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை எடுத்துக் கொண்டால் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. மேலும் இது போன்ற விபத்துகளில் அதிகம் இரவு நேரங்களில் தான் நடக்கின்றன. இந்த விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தால் பட்டுக்கோட்டை, தஞ்சை போன்ற பிற ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்குள் காயமடைந்தவரின் உயிர் பிரிந்து விடும் துயர நிலை தொடருகிறது. 

மேலும் இரவு நேரங்களில் ஒருவருக்கு திடீர் என்று உடல் முடியாமல் போனால் முதலுதவிக்கு கூட இரவு நேர மருத்துவமனை என்று ஒன்று இல்லாமல் இருந்து வந்தது.  இதனை அடுத்து அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ வசதியை ஏற்படுத்தி தரவு வேண்டும் என்னும் நோக்கில் 30-03-2015 அன்று அதிரையில் உள்ள அனைத்து தெருவாசிகள் திரண்டு சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் வகையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Close