அதிரை அருகே கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்திய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!(படங்கள் இணைப்பு)

கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்திய விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று காலை 11.00 மணியளவில் மனோரா குளோபல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் திரு.சுப்பையன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை தலைவர் (கடலோர பாதுகாப்பு குழுமம், சென்னை) அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,காவல் உதவி கண்காணிப்பாளர் ,வருவாய் கோட்டாசியர்,காவல் துணை கண்காணிப்பாளர்,கடலோர பாதுகாப்பு குழுமம், காவல் ஆய்வாளர் கடலோர பாதுகாப்பு குழுமம்,கடற்படை, மீன்வளத்துரை, வருவாய்துறை அதிகாரிகள்,கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மீனவ கிராம பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

செய்தி மற்றும் படங்கள் :
ஹஜ் கபீர் (அதிரை பிறை நிருபர்)

Advertisement

Close