சுப்ரமணியசாமியை கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மேற்கு வங்க மாநிலத்தில் 71 வயது கனியாஸ்திரியை கொடூரமாக கற்பழித்த கயவர்களை கண்டித்தும் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறாக பேசிவரும் சுப்ரமணியசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் இன்று மாலை 4.00 மணியளவில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜகபர் சாதிக் (அதிரை ராஜா) அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு அப்துல் மஜீத் (பட்டுக்கோட்டை நகர தலைவர்),கலிபுல்லா(பட்டுக்கோட்டை நகர செயலாளர்),ஷேக் தாவுது (நகர பொருளாளர்)ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான்,நா.இளந்தென்றல் (மாவட்ட செயலாளர் வி.சி.க),சதா.சிவகுமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரை நகர செயலாளர் பீச் முகைதீன் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 120 பேர் கலந்து கொண்டனர்.  


Advertisement

Close