அறந்தாங்கியில் பதற்றம்! இஸ்லாமியர் மீது கொலைவெறி தாக்குதல்!

அறந்தாங்கியில் பயங்கரவாதிகளால் கடுமையான முறையில் தாக்கப்பட்ட ஜாபர் , இவர் அறந்தாங்கி தினசரி மார்க்கெட் அருகே மாட்டு இறைச்சி பிரியாணி விற்கக்கூடிய சகோதரரான இவரை மூன்று நபர்கள் இன்று மாலை கடுமையான முறையில் தாக்கி , கையை உடைத்து , வண்டியில் உள்ள பிரியாணியை கீழே கொட்டி தன்னுடைய வெறியை வெளிப்படுத்திருக்கின்றனர். பதினெட்டு வருடங்களாக இறைச்சிக்கடை நடத்தி வரும் இவரை இங்கு கடை நடத்தக்கூடாது என்று அந்த மூன்று நபர்களும் துன்புறுத்தியிருக்கின்றனர், காயங்களுடன் மீட்கப்பட்ட சகோதரர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்,இவரை தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளர் சகோதரர் ஜலீல் , அறந்தாங்கி கிளை செயலாளர் சகோதரர் முஜாஹித் மற்றும் கிளை பொருளாளர் சகோதரர் சேக் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Advertisement

Close