அதிரையில் குப்பைக்கு குட்பை! (படங்கள் இணைப்பு)

அதிரையில் இன்று முதல 10ம் வார்டு முதல் 21வது வார்டு வரையிலும் குவியும் குப்பைகளை வாரம் 6 நாட்கள் வீடுதேடி விசில் அடித்து வாங்கும் நடைமுறை அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் முயற்சியில் இன்றுமுதல் துவங்கியுள்ளது. இதற்கு பட்டுக்கோட்டையில் உள்ள S.K  என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள துப்பரவு பணியாளர்கள் 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒவ்வொரு தெருவிற்கும் தலா 2 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக 13வது வார்டு நடுத்தெருவில் துப்பரவு பணியில் ஈடுபட்ட விக்னேஷ் அவர்கள் தெரிவித்தார். இதற்க்கு அனைவரும் ஆதரவு அளிக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close