சுப்ரமணியசாமியை கைது செய்ய கோரி மதுக்கூரில் தமுமுக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

பள்ளிவாசலைகளையும்,கிருஸ்துவ தேவாலயங்களையும் இடித்து தள்ளலாம் அவை வழிப்பாட்டு தளங்கள் அல்ல என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிசாமியை கண்டித்தும் கைது செய்ய கோரி தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் இன்று மாலை 4.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பாதுஷா அவர்கள் தலைமை தாங்கினார்.

தமுமுக முன்னாள் மாநில செயலாளர் தர்மபுரி Y.சாதிக் பாட்ஷா அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள் .இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். 

Advertisement

Close