அதிரை ஈ.சி.ஆரில் சாலை விபத்து!இருவர் படுகாயம்!(படங்கள் இணைப்பு)

ராமேஸ்வரத்தில் இருந்து நாகப்பட்டினத்தை நோக்கி சென்று கொண்டு இருந்த கார் அதிரை ஈ.சி.ஆரில் உள்ள பழைய ஹவான் ஹோட்டல் அருகில் வந்த போது சாலையை கடக்க முயன்ற இருவர் மீது மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது.உடனே தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இருவரையும் அதிரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அந்த காரின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.   

Advertisement

Close