தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 24ம்தேதி வாகனங்கள் ஏலம்!

தஞ்சை மாவட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை தஞ்சை மாவட்ட அரசிதழில் வெளியிட்டும் மேற்படி வாகனங்களை யாரும் உரிமை கோராததால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அரசுடமையாக்கப்பட்ட 68 இருசக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு 4 சக்கர வாகனம் ஆகி யவை தஞ்சை ஆர்.டி.ஓ.வால் பொது ஏலம் விடப்படுகிறது. வருகிற 24ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. 

ஏலத்திற்குண்டான வாகனங்களில் 68 இருசக்கர வாகனங்களும் மற்றும் 4 மூன்று சக்கர வாகனங்களும் தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலும், ஒரு 4 சக்கர வாகனம் நாச்சி யார் கோயில் காவல் நிலையத்திலும் வரும் 22ம்தேதி காலை 10 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமுடையவர்கள் வரும் 24ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை ரூ.10 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி ஏலம் எடுக்க பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலத் தொகையு டன் 14.5 சதவீதம் விற்பனை வரி தொகையையும் சேர்த்து செலுத்த வேண் டும் என நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Close