`ஓயாத’ வேலை – உயிருக்கு ஆபத்தா? Updated

இது குறித்து மருத்துவர் கூறியதாவது:
மருத்துவக் கல்லூரி  நரம்பியல் அறுவைச் சிகிச்சை பேராசிரியர் டாக்டர் டி.பாலசுப்ரமணியனிடம் கேட்டபோது, ”உடலுக்கும், மனசுக்கும் ஓய்வு என்பது கட்டாயம் தேவை. எந்த வேலையாக இருந்தாலும் ஒருநாளைக்கு எட்டு மணி நேரத்துக்குள்தான் செய்ய வேண்டும். எட்டு மணிநேரம் வேலை செய்தாலும், இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் 10 நிமிட பிரேக் தேவை. மூளைக்குள் இருக்கும் ரசாயனத்தின் அளவு குறைந்தாலோ, கூடினாலோ பிரச்னைகள் வரும். அப்படி குறையவோ, கூடவோ காரணம், மூளையை கசக்கி ஓய்வு இல்லாமல் வேலை செய்வதுதான். உடலை நாம் ஓய்வு இல்லாமல் அளவுக்கு அதிகமாக வருத்தும்போது மூளை தானாகவே ஓய்வெடுத்துக்கொள்ளும். அந்த ஓய்வு என்பது நீங்கள் நினைப்பதுபோல சாதாரணமானது அல்ல… அதுதான் கோமா!” என்று சொல்லி அதிரவைத்தார். இறுதியில் கோமாவில் தள்ளி கடைசியில் மரண வாசல் வரை கொண்டு சென்று விடும்.
அன்றாட வாழ்கைக்கு உடற்பயிற்ச்சி மற்றும் விளையாட்டு மிகவும் முக்கியமாகும். சிலர் தங்களது குழந்தைகளை எப்பொழுதும் படிப்பு மற்றும் படிப்பு சார்ந்த வேளைகளில் அதிகம் ஈடு படுத்துவர். இதுபோன்று செய்வதனால் பள்ளி பருவத்திலையே `ஸ்டிராஸ்` ஆரம்பமாகிவிடுகிறது. ஒவ்வொரு வேலைக்கும் நேரம் ஒதுக்கிவிடுவது அவசியம் குறிப்பாக மாலைவேளை விளையாடிர்க்குற்யது.
`மாலை வெயில் காய்தல் மூலம் உடலின் நீரிழிவைகுணப்படுத்தும் என்றும்,உடலிலுள்ள கால்சியம் மற்றும் விட்டமின் டி அளவினை அதிகப்படுகிறதாகவும் ஆராய்ச்சி மூலம் நீருபிக்கின்றனர்` 
ஆனால் மாலையில் தான் டியுசன், ஹோம் வொர்க் போன்ற வேலைகளை பார்க்கவைக்கின்றோம். இது மன அழுத்தத்தை ஏர்ப்படுத்த கூடும். படிப்பு அவசியம் ஆனால் மன நிம்மதி அதைக்காட்டிலும் அவசியமானது. 

இது இளைஞர்களுக்கு  மட்டுமல்ல வேலை வேலை என இளமையை தொலைக்கும் பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.தொழில் துறை
அழுத்தம்:


மன அழுத்தங்கள் பல வழிகளில் ஏற்படுகின்ற
போதிலும் தொழில்தளங்களில் நாம் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்கள் இத்தகைய
மனஅழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் செயற்பாடுகளாக அமைந்துள்ளன.

இக்கருத்துக்களை
நியப்படுத்தும் வகையில் ஆய்வுத்தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வேலைத்தளங்களில்
ஏற்படும் கசப்பான அனுபவங்களானது மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கு காரணமாக
அமைந்துள்ளதாகவும் மன அழுத்தம் என்பது இன்று உலகளவில் பாரிய பிரச்சினையாக
மாறியுள்ளதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தமது ஆய்வுத் தகவல்களில்
தெரிவித்துள்ளனர்.

அலுவலகங்களில்
தொழில்புரிபவர்கள், பாதுகாப்பு படையினர், சுத்திகரிப்பு
தொழிலாளர்கள் முதல் அனைவருமே இத்தகைய மன அழுத்தங்களுக்கு உட்படுபவர்களாகவே
உள்ளனர்.

இரவு பகல் பாராமல்
தொழில்புரிபவர்கள் இவ்வாறான மன அழுத்தங்களுக்கு அதிகமாக உள்ளாகுவதாகவும் மேற்படி
ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில்
ஆத்மதிருப்தியுடன்(Satisfaction) வேலை செய்பவர்களை நாம் இன்று அனேகமாக
காண்கின்றோம். இவ்வாறானவர்கள் வீடுகளில் தமக்கான நேரத்தை செலவிடுவதைவிட தொழில்
தளங்களிலேயே அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர்.

இதனால்
குடும்பத்தினரின் முரண்பாடுகளையும் இத்தகையானோர் எதிர்கொள்கின்றனர்.இவ்வாறு
தொழில்புரிவர்களுக்கு தொழில்தளங்களில் எதிர்நோக்கும் சிறிய அல்லது பாரிய பிரச்சினை
என்றாலும் அது அவர்களை மனதளவில் பாதிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது.
போட்டி, பொறாமை மிகுந்த
இன்றைய சூழலில் ஒருவரை வெட்டி வீழ்த்திவிட்டு உயர செல்ல வேண்டும் என்ற நிலைப்பாடே
ஒவ்வொரு துறைகளிலும் காணப்படுகின்றது.
இத்தகையதொரு
சந்தர்ப்பத்தில் திறமைகளுக்கு மதிப்பளிக்கப்படாமை, திறமைகள்
மழுங்கடிக்கப்படுகின்றமை என்று வரும்போது ஆத்ம திருப்தியுடன் தொழிலாற்றுபவர்கள்
துவண்டு விடுகின்றனர். 
இது அவர்களை மிகவும்
பாதிப்பதாக அமைவதுடன் அவர்களை மன அழுத்தத்திற்கும் தள்ளிவிடுகின்றது. இது
நாளடைவில், மனநல பாதிப்பு, மாரடைப்பு என பலநோய்களுக்கு இயல்பாகவே
அழைத்துசென்று விடுகின்றது.

அமெரிக்க நாட்டுடன்
சேர்ந்து இடைவிடாது போரில் ஈடுபட்ட இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு அதிக அளவில்
மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. 
பிரிட்டன் இராணுவ
வீரர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, 4000 இராணுவ வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பி தியானம்
போன்றவற்றில் பயிற்சி கொடுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியாவில், கூட்டு நிறுவனங்களில்
தொழில்புரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் மன அழுத்தம் பெருமளவு
அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவின் வெள்ளைச்
சட்டை உழைப்பாளிகளில் 66 சதவீதம் பேர் தனிமையை உணர்கின்றனர். 77 சதவீதம் பேர் தமது
மகிழ்ச்சியையும் வருத்தங்களை யாருடனாவது பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.
கடுமையான போட்டிச் சூழலின் காரணமாக தங்கள் விருப்பத்துக்கு மாறாக அதிகம் உழைப்பதாக
63 சதவீதம் பேர்
கூறியுள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள மன
நல அறக்கட்டளை ஆய்வு மையம் ஒன்று அலுவலகங்களில் தொழிலபுரிபவர்கள் எதிர்கொள்ளும்
மனஅழுத்தம் தொடர்பிலான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. 
இவ் ஆய்வறிக்கையில்,
தாம் புரியும்
தொழிலானது அவர்களது வாழ்க்கையில் மிகவும் இறுக்கமான ஒரு நிலையை தமக்கு
தோற்றுவிப்பதாக மூன்றில் ஒரு பங்கினர் தெரவித்துள்ளனர்.

இதன்காரணமாக 57 வீதமானவர்கள் தமது
அலுவலக நேரத்தின் பின் மதுபானம் அருந்துபவர்களாக காணப்படுகின்றனர். இவர்களில் 14 வீதமானவர்கள் தமது
அலுவலக நேரத்தில் மதுபானம் அருந்துவதாக அவ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பணியிடங்களில்
ஏற்படும் அழுத்தம் காரணமாக 7 வீதமானவர்கள் தற்கொலைக்கு முற்படுவதாகவும் அவ்
ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 18-24 வயதுகிடைப்பட்டவர்களிடையே அதிகரித்துக்
காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகங்களில்
ஏற்படும் மனக்கசப்பான சம்பவங்கள் காரணமாக 11 வீதமானவர்கள் தமது தொழிலை இராஜினாமா
செய்துவிடுகின்றனர். இவர்கள் தமது பதவியிலிருந்து வெளியேறுவதை பற்றி
தீர்மானிக்கின்றனர். 
இதேவேளை, தமது அலுவலக தலைமை
அதிகாரிகளிடம் தமது பிரச்சினை தொடர்பில் பேசுபவர்கள் மிகவும் அரிதாகவே
காணப்படுவதாக அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்களில்
தொழில்புரிபவர்களுக்கு மனநலம் சார்ந்த செயற்திட்டங்கள் தேவை என மேற்படி அமைப்பின்
தலைமை அதிகாரி போல் பாமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆறில் ஒரு வீதமானவர்கள்
மனதளர்ச்சிக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். பெரும்பாலான மேலதிகாரிகள்
இவ்வாறானவர்களுக்கு ஆதரவு அல்லது ஊக்குவிப்பு வழங்குவதில்லை என நாம் மேற்கொண்ட
ஆய்வில் கண்டறிந்துள்ளோம்’ என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழில் என்பது
மிகப்பெரிய மன அழுத்தத்திற்கான காரணி என 34 வீதமானவர்கள் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

இத்தகைய
பிரச்சினைகளுக்கு தூக்க மாத்திரை, அல்லது மன அழுத்தங்களை குறைக்கும் மருந்து, அல்லது புகைபிடித்தல்
போன்றவற்றை கடைப்பிடித்து வருவதாகவும் இவை அவர்களுக்கு பிரத்தியேகமான வேறு நோய்களை
ஏற்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் என்பது
உயிராபத்தை விளைவிக்கும் காரணியாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன அழுத்த
அதிகாரிப்பானது இதய நோயாளிகளுக்கு மரணத்தை விளைவிக்கும் காரணியாக அமைந்துள்ளமை
பற்றி பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன என கலாநிதி லானா வடிகின்ஸ் தெரிவித்துள்ளார்.


திட்டமிட்டு வேலை செய்தால் மன அழுத்தம் எட்டிப்பார்க்காது உளவியல் நிபுணர்கள்:


இன்றைக்கு
பெரும்பாலோனோர் அதிக அளவில் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும்
ஆளாகின்றனர். இதற்குக் காரணம் வேலைப்பளுதான். எந்த வேலையையும் திட்டமிட்டு
செய்தால் மன அழுத்தம் எட்டிப்பார்க்காது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மனதிற்கும் உடலுக்கும்
எப்போதுமே தொடர்பு உண்டு. ஸ்ட்ரெஸ்,டிப்ரெஷன் என்பவை எல்லாம் மன அழுத்ததின்
எதிரொலிகள் தான்.
அதிக வேலைதூக்கமின்மைதுரித உணவு என்று வாழ்க்கை ஓட இதில் முதலில் அடிபடுவது மனம் தான். பெண்கள்தான் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு
ஆளாகின்றனர். நமக்கு உள்ள கடமைகளையும் செய்து கொண்டு அதே சமயம் மன அமைதியும்
இழக்காமல் இருக்க உளவியல் நிபுணர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்களேன்.
டோணி
(
M.S. Dhoni) வழி :
இன்றைய
காலகட்டத்தில் இது புதிதாக இருக்கிறதே என்று நினைக்கவேண்டாம். நம்ம இந்தியன்
கிரிக்கெட் கேப்டன் டோணிக்கு கூல் கேப்டன் என்றே பெயர். உலகக் கோப்பையை
ஜெயித்தாலும் சரி, ஒரு
மேட்சில் கூட ஜெயிக்காவிட்டாலும் சரி எப்பவுமே கூல்தான். எந்த சூழ்நிலையிலும்
எதற்குமே அலட்டிக்காத மனோபாவத்துடன் இருந்தால் எந்த விமர்ச்சனத்தையும்
எதிர்கொள்ளலாம். அதை பின்பற்றி பாருங்களேன்.
எதையுமே
அதன் போக்கில் எடுத்துக் கொண்டு சிரிப்பும் உற்சாகமுமாய் இருப்பவர்களுக்கு
டிப்ரஷன் வருவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். கஷ்டமான சூழ்நிலைகளிலும்
ரிலாக்ஸ்டாக இருங்கள் மன அழுத்தம் எட்டிப்பார்க்காது.
நல்ல
உறக்கம்
நாளைக்கு
காலையில என்ன நடக்குமோ என்ற பயத்தில் இரவு முழுவதும் உறங்காமல் இருந்தால் உடலும், மனமும் கெடும். எனவே
நல்லா தூங்குங்க. காலையில் எழும்போது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும்.
புத்துணர்ச்சி ஏற்படும்.
இசையால்
வசமாகும்
நல்ல
மென்மையானஇசை மனதுக்கு இனிய இயற்கை காட்சிகள் முதலியன மன இறுக்கத்தை தளர்த்தும்.
அதேபோல் மனம் விட்டு பேசுதல் எதற்குமே வடிகால் எனலாம். நல்ல புத்தகங்களை எடுத்துப்
புரட்டுங்கள். படிக்க முடியாது. எனவே புரட்டிப் பார்ப்பதே சில நினைவுகளை நமக்குள்
கொண்டு வரும்.
நண்பர்களுடன்
பேசுங்கள்
மன
இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை
மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். உங்கள் பிரச்சினைகளை ஆத்ம நண்பர்களிடம்
மனம் விட்டு பேசுங்கள். முடிக்கும் போது ஏதோ பாரத்தை இறக்கி வைத்த உணர்வு
ஏற்படும்.
திட்டமிடுங்கள்
எந்த
வேலை என்றாலும் அதற்கு திட்டமிடுதல் அவசியம். சரியாக தொடங்கப்படும் வேலை பாதி
முடிந்ததற்கு சமம் என்பார்கள். எனவே சரியாய் திட்டமிடுங்கள். இல்லையெனில்
வேலைப்பளு காரணமாய் ஸ்ட்ரெஸ் ஏற்படும். அதனால் டென்ஷன் வந்து விடும். எனவே ப்ளான்
போட்டு வேலைகளை முடித்தால் மன இறுக்கம், அழுத்தம் ஆகியவை
அண்டாது என்கின்றனர் நிபுணர்கள்.
ப்ராணயாமம்
ப்ராணாயாமம்
எனும் மூச்சுக்காற்றை இழுத்து விடும் பயிற்சி பெருமளவு மன இறுக்கத்தைக்
குறைக்கும். அதேபோல் உடற்பயிற்சி அல்லது வேகமான நடைப்பயிற்சி உடலுக்கு மட்டும்
ஆரோக்கியமானதல்ல மனதுக்கும் தான்.
சிகரெட், மது போன்ற கெட்ட
பழக்கங்கள் மன இறுக்கத்திற்குக் காரணமாகும். இவற்றை சற்று குறைப்பது நல்லது
ஏனெனில் சிகரெட்டும், மதுவும் மன இறுக்கம் விளைவிக்கும் ஹார்மோன்களோடு தொடர்பு
கொண்டவைகள்.
மசாஜ்
பண்ணுங்க
உடலுக்கும்
தலைக்கும் மசாஜ் செய்து கொள்வது நல்லது. நறுமணம் மிக்க பூக்களை முகர்வது போன்றவை
கூட மன இறுக்கத்தை குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
மன
அழுத்தம் ஏற்படும்போது எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட முடியாது. எதிலும் ஆர்வம்
இருக்காது. எல்லோர் மீதும் எரிந்து விழுவோம். தலை வலி, வயிற்று வலி, கோபம் போன்றவை
ஏற்படுவதாக உணர்வோம். மன இறுக்கத்தால் இதயம் மறைமுகமாக பாதிக்கப்படுகிறது. எனவே மன
அழுத்தம் இன்றி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் என்கின்றனர்
நிபுணர்கள்.

நாம் சந்தோசமாக வாழ்வதற்க்காக உழைக்கின்றோம் ஆனால் இன்றைய காலகட்டத்தில் பணத்தின் ஈர்ப்பு அதிகரித்துவிட்டது. அதனால் சந்தோசங்களை தொலைத்து விட்டு எந்திரம் போன்று உழைக்கும் சுழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நிலை மாறுமா!!! 
தொகுப்பு : அதிரை  சாலிஹ்

Advertisement

Close