அதிரையில் நடைபெற்ற நுகர்வோர் தின சிறப்பு சட்ட ஆலோசனை முகாம்!

மார்ச் 15 உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு அதிரையில் ரிலீக்கான் அசோசியேட்ஸ் சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. 
அதிரை  ரிலீக்கான் அசோசியேட்ஸ் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் நுகர்வோருக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் வழிகாட்டலின்படி நடத்தப்பட்டது. இம்முகாமில் ரேஷன் மற்றும் இண்டேன் கேஸ் சம்பந்தமான பிரச்சனைகள், அனைத்து பொருட்களின் விலை, தரம், எடை தொடர்பான பிரச்சனைகள், சேவை நிறுவனங்களான சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேவை குறைப்பாடு, தகவல் அறியும் உரிமை சட்ட பிரச்சனைகளுக்கு நுகர்வோர் நீதி மன்றத்தின் மூலம் நஷ்ட ஈடு பெறுதல், மேலும் நுகர்வோர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முறையான சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து இம்முகாமின் ஒருகினைப்பாளர் Z. முகம்மது தம்பி B.A.B.L., அவர்கள் கூறுகையில் “ நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-1986ன் படி நுகர்வோருக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தந்தை தனது குழந்தைக்காக கடையில் பணம் கொடுத்து பால் பவ்டர் வாங்கினாலும் அல்லது சேவையை பணம் கொடுத்து வாங்கி அதனை பயன்படுத்தும் பொழுது அது தரமற்றவை என தெரியும் பொருட்டு அதற்கான நஷ்ட ஈடு தொகையினை நாம் நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலம் பெறலாம். தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அறிவிப்பின் பதினோராவது ஷரத்தின்படி நுகர்வோர் புகார்கள் “வாய்தா”க்களினால் நுகர்வோர் நீதிமன்றங்களில் ஆண்டுகணக்கில் தேங்கிக் கிடைக்கின்றன. இதனை தவிர்த்து நுகர்வோர் நலனை பாதுக்காக்க எதிர்மனுதாரர் வாய்தா கேட்கும்போது, அதற்கான செலவு தொகையாக ரூபாய் 500ஐ குறைந்த பணத் தொகையாக நுகர்வோருக்கு கொடுக்கப்பட வேண்டும். இதனால் வாய்தா’கள் கேட்பது என்பது குறையும் அதுமட்டுமல்லாமல் நுகர்வோரின் நலனும் காக்கப்படுகிறது.” என்றார்.

Advertisement

Close