அதிரையில் சிறப்பாக துவங்கிய ASC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி! (படங்கள் இணைப்பு)

அதிரை ASC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி இன்று இரவு 9 மணியளவில் ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மைதானத்தில் வானவேடிக்கையுடன் சிறப்பாக துவங்கியது. முதலாவதாக காட்சி ஆட்டத்தினை அதிரை ASC அணியினரும் தைக்கால் தெரு அணியினரும் ஆடினர். இந்த போட்டியினை ASC பயிற்சியாளர் ராஜா, ASC கேப்டன் ஷாஃபி, போட்டிக்கான நான்காம் பரிசை வழங்கிய சாவன்னா ஆகியோர் துவக்கி வைத்தனர். இத் தொடர் போட்டியில் பல அணிகள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர். இத்தொடர் போட்டிக்கான இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நாளை மாலை 5 மணியளவில் நடைபெறும் என போட்டி ஏற்ப்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

பரிசுகள் விபரம்:
 முதல் பரிசு : 10000
இரண்டாம் பரிசு: 7000
மூன்றாம் பரிசு : 5000
நான்காம் பரிசு: 4000

  

Advertisement

Close