அதிரை வாய்க்கால் தெரு பள்ளியில் இடியும் நிலையில் பழைய கட்டிடம்!

அதிரையில் வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 250க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பல வருடங்களாக இப்பகுதியில் இயங்கி வரும் இப்பள்ளிக்கூடத்தில் 5 கழிவரை கூடங்கள் உள்ளன. தற்போது மேலும் ஒரு கழிவரை கூடம் கட்ட உள்ளனர். 

இப்பள்ளி வளாகத்தில் இடியும் நிலையில் ஒரு கட்டிடம் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இதனை இன்னும் இடிக்கவில்லை. ஆனால் 300க்கும் குறைவான மாணவ மாணவிகள் மட்டுமே பயிலும் இப்பள்ளிக்கு 5 கழிவரை கூடங்கள் தேவைதானா!!! இந்த ஆபத்தான கட்டிடத்தை விரைந்து இடிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

 படங்கள்: அபுதாஹிர் (அதிரை பிறை)

Advertisement

Close