அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான கவிதை மற்றும் பேச்சு போட்டிகள்! (படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கவிதை போட்டி நேற்று  (08-03-2015) மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டிகளில் ஏராளமான கல்லூரிகள் கலந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட மாணவர்கள் தனது திறமைகளை வெளிப்படுத்தினர். கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் போட்டியின் நடுவராக இருந்தனர் .

இதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர்  ஏ.ஜலால்,துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன்,தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. கலீல் ரஹ்மான்,தமிழ் துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர்,பேராசிரியர்கள், மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டனர்.இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படங்கள்: பேரா.செய்யது அஹமது கபீர்

Advertisement

Close