அதிரையில் பள்ளி குழந்தைகளை வாகனத்தில் அள்ளி சென்று சாதனை படைப்பது போல சவாரி செய்யும் வாகன ஓட்டுனர்கள்

அதிரையில் பள்ளிகளுக்கு பஞ்மேயில்லை என்பதை நாம் எல்லோருமே அறிந்துருப்போம். அதைபோலவே அப்பள்ளிகளுக்கு, குழைந்தைகளை அழைத்து செல்லும் வாகனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பள்ளி குழந்தைகள் காலையில் விழித்தவுடன் பெற்றோர்களின் வேலை, இவர்களை எப்படியாவது பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்பதே முதல் நோக்கம். அப்பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்காக பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் வீட்டு வாசலுக்கு வந்தவுடன் வாகன ஓட்டிகள் ‘ஙீஙீ’  ‘ஙீஙீ’ என்ற ஹாரன் சப்தத்தை ஒலிப்பார்கள்.

அப்பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு ஹாரன் சப்தத்தை கேட்டவுடன் ரத்தம் கொதித்து, குழந்தைகளை அனுப்பிவைப்பார்கள்.
அனுப்பிய பிறகு என்ன நடக்குமென்று பெற்றோர்களுக்கு தெரியுமா? அந்த வாகனங்களில் பள்ளிக்கு செல்லும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மூச்சு திணறல் ஏற்படுகிறது. காரணம், அவ்வாகனங்களில் குப்பைகளை அள்ளி செல்வது போல பள்ளி குழந்தைகளை அள்ளி செல்கின்றனர். 

அதுமட்டுமின்றி பள்ளி குழந்தைகளின் மடியில், மாடிபடியை போன்று ஒருவொருக்கு மேல் ஒரு குழந்தையை உட்கார வைத்து சவாரி செய்கின்றனர். இப்படிப்பட்ட வாகனங்களில் 12-14 குழந்தைகளை ஏற்றுவதற்கான இடங்கள் மட்டும் தான் உள்ளது. ஆனால் நம் அதிரையில் 40-50 குழந்தைகளை ஏற்றி சாதனைப்படைப்பது போல சவாரி செய்கின்றனர். 

இப்படிப்பட்ட வாகனங்களில் உங்கள் குழந்தைகள் சென்றால் என்ன கதி? இவர்கள் தான் நாளைய இந்தியா! இவர்களுக்கு ஒன்றென்றால் நம்மால் தாங்கமுடியுமா? சிந்தித்து செயல்படுவீர்.

     ஆக்கம்: இர்ஷாத் பின் ஜஜஹஃபர் அலி
                      அதிரை பிறை 

Advertisement

Close