முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டியில் தஞ்சை அணிக்காக ஆடிய அதிரை வீரர்கள்!

முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டி திண்டுகல்லில் உள்ள G.T.N.கலை கல்லூரி மைதானத்தில் (6,7,8-03-2015) ஆகிய தேதிகளில் மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த போட்டியில் தலைசிறந்த 8 மாவட்ட அணிகள் கலந்து கொண்டது.இதில் தஞ்சை மாவட்ட அணியும் கலந்து கொண்டது. தஞ்சை அணிக்காக அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த S.ஹாஜா சலாவுதீன் S/O.ஷேக் முஹம்மத் அவர்களும்,அதிரை தரகர் தெருவை சேர்ந்த S.சைபுதீன் S/O.சிராஜுதீன் ஆகியோர் ஆடினார்கள்.இந்த போட்டியில் தஞ்சை அணி தங்களிடம் மோதிய அனைத்து அணிகளையும் தோற்கடித்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதி ஆட்டத்தில் திருச்சி vs தஞ்சை அணி மோதியது. இதில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது .இதனையடுத்து இரு அணிகளின் ஒட்டு மொத்த புள்ளிகள் பார்க்கப்பட்டது .இதில் தஞ்சை அணி 10 புள்ளிகளும் , திருச்சி அணி 9 புள்ளிகளும் பெற்று இருந்தது .இதனால் தஞ்சை அணி வெற்றி பெற்றது என அறிவிப்பு செய்தார்கள் .வெற்றி பெற்ற தஞ்சை அணி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

வெற்றி பெற்ற தஞ்சை அணிக்கும்,நமதூருக்கு பெருமை சேர்த்த இரு வீரர்களுக்கு அதிரை பிறை வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது.

Advertisement

Close