அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம்! (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொது குழு கூட்டம் 06-03-2015 வெள்ளி கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபாயில் உள்ள  சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் மாஷா அல்லாஹ் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது, நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான கடற்கரை தெரு முஹல்லா வாசிகள் கலந்து கொண்டு சிறபித்தார்கள்

கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்ட முக்கிய தீர்மானம் 

கடற்கரை தெரு 8வது வார்டில் அடிக்கடி நிகழும் தண்ணீர் பற்றக்குறையை நிவர்த்தி செய்ய தண்ணிர் தொட்டி கட்டுவதே நிரந்தர தீர்வு என்பதால், தண்ணீர் தொட்டி கட்டி தரப்படும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு சேனா முனவை (ஹாஜா முகைதின்) போட்டி இன்றி தேர்வு செய்ய ஆதரவு அளித்தது, ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு முயற்சியும் எடுக்க படாததால் கடற்கரை தெரு அமீரக அமைப்பு தனது அதிர்ப்தியை தெர்வித்து கொள்வதோடு 8வது உறுப்பினரிடம் (சேனா முனாவிடம்) உரிய விளக்கத்தை விரைவாக அளிக்குமாறு கோரியுள்ளது.   

 ADIRAI BEACH EMIRATES ASSOCIATION

Advertisement

Close