அதிமுக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில் தஞ்சையில் நடத்தப்பட்ட பாசறை எழுச்சி தின பேரணியில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு!

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிமுக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை சார்பில் பாசறை எழுச்சி தின பேரணி இன்று (07-03-2015)காலை 9.00 மணியளவில் தஞ்சை டாக்டர்.எம்.ஜி.ஆர் சிலை இருந்து அண்ணா சிலை வரை பேரணியாக சென்றனர்.பாசறை எழுச்சி தினப் பேரணிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .

முன்னதாக ஆர்.அலெக்ஸ் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை,இளம்பெண்கள் பாசறை செயலாளர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.இந்த பேரணிக்கு இளைஞர் பாசறை,இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள்,ஒன்றிய,நகர,பேரூர் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

மேலும் இந்த பேரணிக்கு அதிரை அதிமுக நகர செயலாளர் A.பிச்சை ,நகர துணை செயலாளர் M.A.முஹம்மத் தமீம்,நகர இளைஞர் பாசறை,இளம்பெண்கள் பாசறை செயலாளர் அகமது தாகிர் ,கவுன்சிலர் சிவக்குமார் மற்றும் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினார்கள் கலந்து கொண்டனர் .இறுதியாக S.மோகன்குமார் (தஞ்சை நகர இளைஞர் பாசறை,இளம்பெண்கள் பாசறை செயலாளர்)நன்றியுரை ஆற்றினார்கள்.இந்த பேரணியில் 1000க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் .

Advertisement

Close